காவலர் தினக் கவிதை

👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️

*தேசிய காவலர் தினம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️

1954இல் சீனா அசுரர்கள்
லடாக்கின் மீது
போர் தொடுத்தனர்....
அவர்களை வதம் செய்தபோது
இந்தியாவின்
பத்து காவல் (ஆ)சாமிகள்
உயிர் தியாகம் செய்தனர்...
அவர்கள் நினைவாக
எழுப்பப்பட்டதே
இந்தக் காவலர் தின
நினைவு தூண்...

இவர்கள்
அபிஷேகம்
ஆராதனை செய்யப்படாத
தெய்வங்கள்....
காக்கி உடையில்
உலா வரும் கடவுள்கள்.....

இங்கு பலர்
திருடாமல் இருப்பது
பூட்டுக்கு பயந்து அல்ல
'ஏட்டுக்கு' பயந்து தான்....

இவர்கள்
வீட்டுக்காக வாழ்ந்த
நாட்களை விட
நாட்டுக்காக வாழ்ந்த
நாட்களே அதிகம்.....

ஊரும் நாடும் மட்டுமல்ல
இவர்களுடைய
உறக்கமும் பசியும் கூட
இவர்களின்
கட்டுப்பாட்டில் தான்
இருக்கிறது.....

வெயிலோடும்
மழையோடும்
வாழப்பழகிக் கொண்டவர்கள்...

நாம் குடும்பத்தோடு
விழாக்களைக் கொண்டாட
இவர்களின் குடும்பங்கள்
இவர்கள் இல்லாமல்
விழாக்களைக்
கொண்டாடுகிறது...

அரசியல்வாதிகளால்
வாடிக் கசங்கி போவது
மலர் மாலைகள் மட்டுமல்ல இவர்களின்
மனங்களும் தான்.....

நாட்டை
ரோட்டை
வீட்டை
விஐபிக்களைப் பாதுகாக்க
இவர்கள் இருக்கிறார்கள்
இவர்களைப் பாதுகாக்க
யார் இருக்கிறார்கள் ?
இவர்களின்
துணிவைத் தவிர.....

திரைப்படங்கள்
காவலர்களை
நல்லவர்களாக
அறிமுகம் செய்ததை விட
கெட்டவர்களாகவே
அதிகம் அறிமுகம் செய்ததால் தான்
மக்களுக்கும்
இவர்களுக்கும்
இடையவெளி அதிகரித்ததோ?

இவர்களின் மனம்
அமைதியாக
இருக்கிறதோ இல்லையோ
இவர்களால் தான்
நாட்டில் அமைதி இருக்கிறது....

பூமிக்கு அடுத்தப்படியாக
விடுமுறை இல்லாமல்
இவ்வுலகில்
வேலை செய்வது
இவர்கள் மட்டுமே....!

இவர்களை
காவல் தெய்வங்கள் என்று
பாராட்டுவது
சாலச் சிறந்தது அல்ல...
ஏனெனில் ?
அந்த தெய்வங்களையே
பல சமயங்களில் பாதுகாப்பது
இவர்கள் தான்.....!!!

*காவலர் தின நல்வாழ்த்து !!!*

*கவிதை ரசிகன்*


👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (21-Oct-24, 8:51 pm)
பார்வை : 3

மேலே