பாரடா வாழ்க்கையில் காதல் விரிக்கும் கவின்ரோஜாப் பாதையை

காதலித் தால்மட்டும் போதுமா பூவையின்
காதலெழில் கண்களில் பாரடா வாழ்க்கையில்
காதல் விரிக்கும் கவின்ரோஜாப் பாதையை
கோதையின் பூவிழிக் கோலமோர் வானவில்
தீதிலா வீணையின்நா தம்

----- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

அடி எதுகை --- காத காத காத கோதை தீதி

சீர் மோனை 1 3 ஆம் சீரில் ----கா போ கா பா கா க கோ கோ தீ த

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-24, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே