பெரிய கருப்பன் சின்ன கருப்பன்

பெரிய கருப்பன்: உன் தோழன் ஏகாம்பரம் இப்ப என்ன தொழில் பண்ராறு?
சின்ன கருப்பன்: கனகாம்பரம் பூ விக்கறாரு
&&&
சின்ன கருப்பன்: சிக்குன்னு சிரிக்கும் சின்ன சித்தப்பா சிதம்பரம், சிக்கா சித்தப்பிரமையா சின்னமேடு சின்னம்மா ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருந்தாரேம், இப்போ சித்த தேவலையா?
பெரிய கருப்பன்: சித்தம் சிறக்க, சித்த நாளா சித்த மருத்துவம் எடுத்து வருகிறார்.
&&&
பெரிய கருப்பன்: உன் மாமன் குற்றாலம், தலை காஞ்சிப்போய் இருக்காருன்னு சொன்னியே? இப்போ எங்கே அவர்?
சின்ன கருப்பன்: காஞ்சிபுரம் போய் தேஞ்சி நேத்துதான் ஒஞ்சி போய் வந்தார்.
&&&
சின்ன கருப்பன்: ஏம்பா, நம்ம ராஜாவும் அண்ணாமலையும் ஊடு தேடிக்கின்னு இருந்தாங்களே. இப்போ எங்க இருக்காங்க?
பெரிய கருப்பன்: ராஜா அண்ணாமலைபுரம்.
&&&
பெரிய கருப்பன்: ஐஸ் மோர் விற்கும் ஐஸ்வர்யா வீட்டில் கொஞ்ச நாள் முன்பு ஒரு புலி நுழஞ்சிட்டுதாமே. பாவம் என்னாச்சு அவளுக்கு?
சின்ன கருப்பன்: பாவம் அவளுக்கில்லை. இப்ப வீட்டு மாட்டு கொட்டாய்ல அதை கட்டிப்போட்டு, தினமும் அதுக்கு ஐஸ் மோர் கொடுத்து புலிப்பால் கறந்துக்கிறாளாம்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Nov-24, 2:44 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 9

மேலே