தொன்னுத்திஒன்பது சவுக்கடி
விசாரணையை முடித்துவிட்டு நீதிபதி குற்றவாளிக்கு தொன்னுத்திஒன்பது சவுக்கடி கொடுக்க தீர்ப்பளித்தார். குற்றவாளி நீதிபதியிடம் "ஐயா, அது என்ன தொன்னுத்திஒன்பது சவுக்கடி, நூறாக கொடுத்தால் சவுக்கடியை எண்ணுவதும் சுலபமாக இருக்கும், எனக்கும் வெளியில் 'நூறு சவுக்கடி கொடுத்தார்கள் ' என்று சொல்லிக்கொள்வதற்கு பெருமையாக இருக்கும்" என்றான். நீதிபதி சொன்னார் "599, 899, 2099" என்பது போன்ற விலைப்பட்டியல், பாட்டா ஷுகாரங்க மட்டும்தான் போட முடியுமா? நாங்க கூட இது போன்ற தீர்ப்புகள் கொடுக்க முடியும். உனக்கு வேணும்னா, அடிகொடுப்பவர்கிட்ட பேசி, ஒரு சவுக்கடி எக்ஸ்ட்ரா வாங்கிக்கோ".