நிஜம்

உலகத்து படைப்பா இருக்கிற அத்தனை அழகான விஷயமும் தங்களுக்கென ஒரு அடையாளம் விதிப்பதில்லை. அப்படிப்பட்ட அழகான படைப்புகளில் ஒன்றுதான் நான் என நம்புறேன்.
நான் சிலதைப் படைக்கிறேன்.
சிலதை வாசிக்கிறேன்.
சிலதை முனுமுனுக்கிறேன்.
சிலதை உருவாக்குகிறேன்.
சிலதுக்கு தூரிகையால் உயிர்க்கொடுக்கிறேன் என்பது,
பூக்கள் யாருக்கும் தெரியாமல் பூக்கும்போது மீயொலி எழுப்புவதைப்போன்றது,
தூரிகை நெழியும் அவள்களின்
அங்க வரைகளைப் போன்றது.
யாரோ உடைய துடிக்குரலிலிருக்கும் சப்தங்களைப் போன்றது,
தூவலில் பொழிந்தொழுகும் நீல நிற மைப்போன்றது என் பிறவி.
இதில் நான் மட்டுமே .
என்னை நேசிக்கும் சிலர் மட்டுமே . அடையாளம் ஏதுமின்றி.
புதுப்புது மனிதர்களுக்கு
புதுப்புது புதுமையாக.

இன்னது தெரியும் ன்னு காண்பிக்கக்கூட கூச்சம்கொள்ளும் தொட்டாற்சிணுங்கி. யாரும் கண்டுக்கவும் மாட்டாங்க அதை. அதுதான் அதனுடைய பாதுகாப்பும் கூட இல்லையா ம்.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (9-Dec-24, 9:10 pm)
Tanglish : nijam
பார்வை : 45

மேலே