புகார் மனுக்கள்

புகார் மனுக்கள்

ஓடும் நதியொன்று
திகைத்து போய்
நிற்கிறது
வந்த வழியை
காணாமல்..!

எங்கே தான்
செல்லும் பாதை?
நேற்று வரை
வந்து சென்ற
பாதைதான்
அதற்குள் கிடைத்த
பாதையை பிடித்து
பின்வந்தவர்கள்
செல்ல முயற்சிக்க

ஊரே போராட்டகளமாய்
வாகன போக்குவரத்து
பாதையில் நிற்கிறது

காரணம் என்னவோ
தண்ணீர் ஊருக்குள்
புகுந்து விட்டதாக

காவல் துறையும்
போராடும் மக்களும்
பேச்சு வார்த்தை
நடத்தி அவரவர்கள்
வேலையை பார்க்க
சென்று விட்டார்கள்.

நதி இப்போது
காவல்துறை வாசலில்
காத்திருக்கிறது
தான் செல்லும்
பாதையை காணவில்லை
என்று புகார் கொடுக்க

காவல்துறை ஊழியர்கள்
கோரிக்கை கொடுக்க
சென்றிருக்கிறார்கள்
ஆற்று நீர் வாரியத்திற்கு

அவர்கள்
பணி புரியும்
அலுவலகம் தண்ணீரில்
மூழ்கி விட்டதாக

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Mar-25, 4:00 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 15

மேலே