காதல் ஓர் அதிசய கண்ணாடி

காதல் ஓர்
அதிசய கண்ணாடி - நீ
முன் நின்றால் - உன்
முகம் காட்டாது
ஆண்யென்றால் பெண் காட்டும்
பெண்யென்றால் ஆண் காட்டும்.

தூரத்தேச் சென்றாலும்
தொடர்பறுந்து போனாலும் - செயற்கை
தொடர்பறுந்து போனாலும்
உள்ளிருந்து உறவாடும்
மனமுவந்து ஊடலிடும்.

கடல் கடந்து போனாலும் - தன்
கருமம் மறந்து போனாலும்
கருவிழியுள் படமாகும்
கற்பனை உலகாகும்
கனவும் நினைவும் ஒன்றாகும்.

பெண் மகளோ, ஆண் மகனோ
ஆள்வது இதயமன்றோ - காதல்
ஓர் அதிசய கண்ணாடி..



எழுதியவர் : avighaya (10-Aug-10, 9:42 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 584

மேலே