கருவறையில் குடியேற வருவாய் அம்மா..!
தாய்மையை பற்றிய
வார்த்தைகள் வித்தகர்
பலர் விளக்கி விட்டாலும்
மோட்சம் தேடிக் கொள்ள
நானும் இங்கு விளம்புகிறேன்.
.வினாடி நின்று கேளீர்....
இருப்பதை தம் மக்களுக்கு
பிரித்து தருவதில்
அரசியலை மிஞ்சுவாளே...!
.உப்பு குறையைக் கூட
தானாய் சமன் செய்து விடுமே
அவள் வியர்வை துளியாலே....!
கடுகு தெரித்தும்
கலங்காத விழிகள் கூட
என் கண நேர
பிரிவு தாங்காமல் மழை சிந்துவாளே...!
புயலே வந்து களையாத
அவளின் உறக்கம்
என் மீது பூ
விழுந்து களைவாளே...
கருவறை தொட்டு
நான் கல்லறை
போகும் வரையிலும்..
உன் மடி சுகம் பெற்றிட
மனம் ஏங்குது அம்மா..!
உந்தன் கருவறை மகளாய்..
எனக்கு தந்த வரம்தனை...
.நன்றி கடனாய்
நான் தீர்த்திட
இனி வரும்
ஜென்மன் முழுமைக்கும்...
எந்தன் கருவறையில்
குடியேற வருவாய் அம்மா...!