மனதின் மணம்...

இரண்டு பேராக இருந்தாலும்
மனம் ஒன்றாத ஒவ்வொரு நொடியும்
நரகமாகும் நகராத நிமடங்கள்...
இரண்டு பேர் மட்டுமே இருந்தாலும்
உலகமே அழகானது போல் தோன்றும்
மனம் ஒத்து திழைத்திருந்தால்...

மனமில்லா திருமணங்கள்
மணமில்லா பூக்கள்...
மனதில் குத்தும் வேலிகள்...
மனமொத்த உறவுகள்
வருடிவிடும் மல்லிகைகள்...
மனத்தைக் குளிப்பாட்டும் அருவிகள்..

மரணமில்லா வாழ்க்கை தேடும்
பந்தபாசம் இருந்தால்...
இன்னும் ஜென்மங்கள் எடுத்தாலும்
சேர்ந்திருப்பது போதாதது போல்...
இணையான இணை வந்தால்
இணையானது எதுவும் இல்லை..

மரணத்தை எதிர்பார்த்துத் தேடும்
பந்தபாசம் விட்டுப் போனால்...
வாழ்க்கை என்னவோ ஒரு முறை தான்
பல முறை பயணித்த களைப்பு...
மனமெல்லாம் இருண்டு தேடுகையில்
மயானமே வெளிச்சமாய்த் தெரியும்...

எழுதியவர் : shruthi (27-Oct-11, 12:00 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 307

மேலே