அறிவும் மனமும்

ஓர் அடர்ந்த காட்டில், மரத்தடியில்
இரு கருப்பு உருவங்கள்

ஒரு உருவம் பேசியது
"கண்ணே, காதலிக்கலாம் வா !"

மற்றொன்று மறுத்தது

"நீயோ கட்டுக்கடங்கா காட்டாறு
நானோ சலனமில்லா ஜீவ நதி ! "

"நீயோ பாய்ந்து வரும் வேங்கைப் புலி
நானோ வேலி தாண்டா வெள்ளாடு !! "

" ஒருபோதும் நாம் கருத்தொரும்மிக்க இயலாது !!!"

அறிவும் மனமுமாகிய அவ்விரு உருவங்களும்
அவ்விடத்திலிருந்து மறைந்தன !!

எழுதியவர் : உஷா (27-Oct-11, 10:48 am)
சேர்த்தது : USHA MD
பார்வை : 358

மேலே