கடவுளப்பா..( கடவுள் + அப்பா )....



சிங்கம் என்றால்....
தங்கம் என்றால்...
செல்லம் என்றால்...
தென்றல் என்றால்...
பாசம் என்றால்...
நேசம் என்றால்...
கனிவு என்றால்...
கடவுள் என்றால்... நீதனாப்பா..

நடை வண்டி ஏதுமின்றி...
நீ நீட்டிய விரல் பிடித்து .. நடை பயின்று கொண்டேனப்பா..

அன்று முதல் இன்று வரை... உன் விரல் நுனியிலே..
என் ஆனந்த வாழ்க்கை ..தொடருதப்பா..

நீ வேகத்தின் மகன் என உன் நடை சொல்லுமே..
நீ வீரத்தின் மகன் என உன் வெற்றி சொல்லுமே..
நீ விவேகத்தின் மகன் என புத்தி சொல்லுமே...
நீ முழுமையான மனிதன் என பேர் ( காமில் ) சொல்லுமே

வின்மீன்கள் கடன் கேட்கும் உங்கள் கண்ணின் ஒளி வேகமே..
ஊரெல்லாம் அணி வகுக்கும் உங்க ஒரு சொல்லிலே...

அழியாத புகழ் கொண்ட என் தந்தையே..
நீ என்றேண்டும் ஆண் வடிவில் எனது அன்னையே..

எப்போதும் நிறுத்தாத உன் பொது சேவைதான்...
எங்கள் உயிர் காக்கும் ஆச்சர்ய புது போர்வைதான்...

பாசமான வாசத்தை
என் குருதியில் கலந்த கடவுளப்பா..( கடவுள் + அப்பா )....

என் முன்னோர்கள் பலர் செய்த சிறப்பு தவத்தின் பரிசு நான்தானப்பா ..
சிரமங்கள் ஏதுமின்றி சிறந்து வாழ எனக்கு கிடைத்த சிறப்பு தந்தை நீதானப்பா..

தந்தை எனும் மந்திரமே என் மூச்சுதான்...
கடல் கடந்து நான் இருந்தாலும் கருக்காது உங்கள் பாசம் தான்...

எனக்கு கிடைத்தை அருட்தந்தை..
உலகில் எல்லோருக்கும் பெரும் விந்தை..

பரிவோடு பார்த்தீங்க...
பண்போடு வளர்த்தீங்க..
அன்போடு அனைச்சீங்க..
ஆசையோடு பேசினீங்க..
கதை சொல்லி வளர்த்தீங்க..
கண்டிப்போடும் நடந்தீங்க...
கவனிப்போடு கலந்தீங்க..
கனிவாகவும் கடிச்சீங்க...
கஷ்டத்தை நீங்க சுமந்து.. மன இஷ்டத்தை தந்தீங்க..

கைம்மாறு செய்ய எனக்கு வயசு பத்தாது...சொல்ல போனால்
கைம்மாறு செய்யும் காரியமல்ல இது...
ஆனால் ஒன்னு சொல்றேன்ப்பா..
என் மகனை உங்களை மாதிரி வளர்ப்பேன்பா...

எழுதியவர் : கலிபா sahib (27-Oct-11, 11:38 pm)
பார்வை : 688

மேலே