என் காவியத் தமிழ் மகள்...!
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்
குமிழ் சிரிப்பும் - சங்கத் தமிழ் பெண்
சந்தோசமாய் சிரித்திருந்தாள்...!
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும் - இப்போதும்
இனிமையாய் சிரித்தே அவள் இருந்தாள்..!
நான் சிரித்தாள் தீபாவளி ஹோய் - என
நலமாகவே தான் சிரிப்பதை - நிர்பந்தமாய்
நிச்சயப் படுத்திக் கொண்டாள் தமிழ் பெண்..!
சிரி,சிரி,சிரி,சிரி,சிரி,சிரி,சிரி,சிரி,சிரி,சிரி...!
உலக நாயகன் ஜோக் கடிக்க - தமிழ் பெண்
உண்மையாக கொஞ்சம் சிரித்தாள்....!
அட்ரா அட்ரா நாட்டு மொக்கை நாட்டு மொக்கை
நாட்டு மொக்கை நாட்டு மொக்கை நாட்டு மொக்கை !
அடித்த உடன் அழுகிறாள் அழகுத் தமிழ் பெண்..!
கொஞ்சினார்கள் என்னை அன்று மடி மீது அமர வைத்து..!
கொத்து பரோட்டா போடுகிறார்களே கொடும்பாவி மனிதர்கள்..!
கொஞ்சம் என்னை காப்பாத்துங்கள்..
கொலையுண்டு போய் விடுவேன் .....
கதறுகிறாள்...கத்துகிறாள்..என் காவியத் தமிழ் மகள்...!
காப்பற்றுவோமே அவளைக் கொஞ்சம்...!