இன்று பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்!

பரிதிமாற் கலைஞனாய்
பார்புகழும் அறிஞனே !
பகுத்தறிவில் தமிழ்புகழை
பண்படுத்தியே வேந்தனே !

முப்பத்தி மூன்று ஆண்டுகள்
முழு நிலவாய் இருந்த நீ!
உலகமுழுக்க ஒளிவழங்கி
ஓய்வெடுக்க சென்றாயோ ?

இலக்கணத்தில் இலக்கியத்தில்
இனிய தமிழை தேர்ந்த நீ!
சொந்தபெயரை தமிழில் மாற்றி
சுத்த தமிழனாய் உயர்ந்தாயே !

மில்லர் கலக்கம் எனக்குமுண்டு
மீண்டும் வருவாய் செந்தமிழாய் நீ!
நாடகவியலை திருத்தம் செய்ய
நற்றமிழை கொண்டு வருவாயோ!

உந்தன் நினைவு எனக்குமுண்டு
உலக முதன்மொழி தமிழன் நான்
எந்தன் பெயரை தமிழில் வைக்க
எப்போது விரும்பி நீ வருவாயோ ?


குறிப்பு :

பரிதி மாற் கலைஞர் இயற்பெயர் : சூரிய நாராயண சாஸ்திரிகள்
ஸ்காட்லாந்தை சேர்ந்த மில்லர்
பரிதிமாற் கலைஞர் மறைந்து போனதை நினைத்து வருந்தியது
"என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்.
ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே."

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (2-Nov-11, 1:34 pm)
பார்வை : 599

மேலே