கல்லறை

உலகை பார்க்க விரும்பி
விரல் விட்டு எண்ணி கொண்டு
உன் இதய துடிப்பில் சுற்றி திரிந்தேன்
அன்னையே உன் கருவறையில்
பஞ்சத்தில் பரிதவித்து
பாடையில் பயணிப்போரும்
கொள்ளை நோயின்
கொடுமையால் கொலையுண்டோரும்
மனிதனை மனிதன்
மதியிழந்துபோய்
மரணப்பாயில் சுற்றுவதும்
இறைவனும் சீற்றம் கொண்டு
இயற்கையை ஏவிவிடுவதும் என
எங்கும் மரண ஓலங்களே
இதை பார்க்கவா பத்துமாதங்கள்
உன்னை சுமைதாங்கி ஆக்கினேன்
ரணங்களோடு வாழ்வதை
விட மரணங்கள் மகிழ்வானது
காப்பாற்ற எவரும் இல்லாத
அநாதரவான இவ்வுலகில்
ஆடம்பரமான வீடு எதற்கு
அமைதியாகவும் ஆழமாகவும் உறங்க
ஆறடி நிலத்தில் அடக்கமான கல்லறை போதும்

எழுதியவர் : sai janany (2-Nov-11, 10:31 am)
சேர்த்தது : kajany
Tanglish : kallarai
பார்வை : 388

மேலே