ஆரம்பமும் முடிவும்
ஈரமான சுமைகளை சுமந்தலையும்
ஓவ்வொரு இரவையும்
எங்கே போய் தொலைப்பது...
இந்த பாதை இங்கே முடிந்தாலென்ன...
இந்த பயணம் இங்கே தொலைந்தாலென்ன...
என எண்ணும் போதெல்லாம்
ஒவ்வொரு நொடியாய்
என் பயணமும் எனக்கான பாதையும்
மேலும் மேலும் விரிந்து கொண்டே போகிறது...
முடிவைத் தொட வேண்டும் எனவும்
இடையில் தொலையக்கூடாது எனவும்
நான் அதன் பின்னால்
நகர்ந்து கொண்டே இருக்கிறேன்.