"Seythakurrangkal.............."

"செய்தகுற்றங்கள்............."

வளரும் தளிர்களைவிட
உதிரும் இலைகளே
"உரமாகும்.............."

மிதக்கும் மேகத்தைவிட
விழுந்த நீர்த்துளிகளே
"பசுமையை படரவிடும்........."

மௌனக் காற்றைவிட
தழுவிடும் தென்றலே
"இதம் பரப்பிடும்........."

கண்ட வெற்றியைவிட
செய்த குற்றங்களே
"அனுபவப் பாடமாகும்..........."

தோன்றும் எண்ணத்தைவிட
எடுக்கும் முயற்சிகளே
"வெற்றியடையச் செய்திடும்............"

"முயற்சி எடுங்கள் தோழர்களே
வெற்றியடைவீர்கள்............."

எழுதியவர் : Sureka (12-Aug-10, 3:23 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 396

மேலே