விழிகளில் பல கனவுகள் ......
நாம் கடந்து வந்த பாதசுவடுகள் மீது
கண்ணீர் பூக்கள் தூவி காத்திருந்தேன்
மீண்டும் இறந்தகாலம் விடியாதா என்று
விழிகளில் பல கனவுகளோடு .......
கனவோடு கனவாக தினமும் வந்தாய்
கனவென்று நினைத்தாலே நீதான் வருகிறாய்
என்றன்றும் என்கனவில் நீ வருவாய்
அன்று நம் இறுதி சந்திப்பு நினைவுகளோடு ....
உன் நினைவுகளுடன் தினம் நான் வாழ்கிறேன்
உன் நினைவில் நான் இல்லை என்பதையும் ,
அறிவேன் நான் - உன்கனவில் என்றாதும்
நான் வந்தால் தயவு செய்து என்னை தேடாதே
உன்னுள் தான் நான் என்றென்றும் வாழ்வேன்
விழிகளில் பல கனவுகளோடு ......
p.s : வெளியில் தேடினாலும் கிடைக்க மாட்டேன் .....