மழை என்ற பெயரில் - ஓர் உறவு

ஓ! மழையே
இன்று தான் - உன் நினைவில்
தோன்றியதா ? என்னை
நினைக்க வேண்டுமென்று....
நினைத்ததற்கு நன்றி!
எத்தனையோ முறை
மண்ணை நினைத்தபோதும்
என்னை ஏன் நினைக்கவில்லை?
கோவத்தில் அல்ல
ஏக்கத்தில் கேட்கிறேன்....
உறவே இல்லையனே
கலங்கிருந்தேன்....
கலங்கமில்லா மழை துளியால்
இறைவனின் படைப்புகள்
அனைத்துமே....
உறவில்லா மனிதருக்கு உறவேயென
உணரவைக்க வந்தாயோ
மழை என்ற பெயரில் - ஓர் உறவு!
- மழையின் உறவை
ரசித்தவள் !!