இன்பம் - 389

பொருட்பால்
...........................
அரசியல்
..............................
இறைமாட்சி
..........................................................................................
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
.........................................................................

கவிதையாய் பொருள்
..................................................................................
செவிக்கொவ்வாத கடுஞ்சொல் கூறினும்
புவிக்கொப்பாய் பொறுமையில் வளர்ந்து
பண்பாளும் மன்னனின் குடைகீழ்
மண்நெடிதும் விரும்பியே இருக்கும்.

=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (9-Nov-11, 1:49 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 247

மேலே