நேசமாக வந்தாய் என்னருகில்!!..
வாழ்க்கையில் வசந்தமாய்
வந்தவனே, என்னை
அலைகழித்து சீண்டுவதே
உனக்கு பிடித்த வேலையோ!!..
உன் வாய் வார்த்தையினால்
பித்து பிடிக்க வைத்தாய்,
உன் இனிய குரலுக்காக
உன் அழைப்பை எதிர் பார்த்து
காத்து இருக்க வைத்தாய்!!..
நிழலாக என்றாவது
வருவாயா, என்று மனம்
ஏங்கி தவித்து தயங்கி நிற்கையில்
நிலா வெளிச்சத்தில் நீ,
நேசமாக வந்தாய் என்னருகில்!!..