நீங்காது நிலைத்திருக்கும் ...

யுகங்கள் பல
கரைந்து போனாலும் ..
உன் நினைவுகள்
என்றும் கரைவதில்லை ...
அந்தி வானில் அலையும்
மேகங்கள் போல
இந்த கண்களும்
உன்னை தேடி அலையும் ..
அலைகளை எதிர்நோக்கி
காத்திருக்கும்
கரைகள் காய்வதில்லை..
தழுவி கொண்டிருக்கும்
தண்ணீரின் குளிர்ச்சியை
தாங்கி கொண்டேயிருக்கும் ...
பிரிவு ஒன்றை சந்தித்தும்
நிஜமான நட்பும்
நீங்காது நிலைத்திருக்கும் ...


எழுதியவர் : கே. அமுதா (12-Nov-11, 1:23 pm)
பார்வை : 610

மேலே