சடலமாய்போயிற்று

கண்ணிமைக்கும் நொடியிலும் - என்னை
கண்மணிபோல் - காத்த அன்னை!!!

என் கால்கள் இடராதவாறு - தன்
கரங்களில் தாங்கிய - தந்தை!!!

வாழ்வின் வழிகாட்டியை
விளங்கிய - அண்ணன்!!!

உறவின் பாலமாய்
வந்த- உறவினர்கள்....

என்றும் பிரியா
தோழமையுடன்....
தோல்கொடுக்க - தோழர்கள்!!!!

என எனக்கு உயிரூட்ட
வந்த அத்துணை
உயிரின்..... உணர்வுகளும்....
என்னுள் உயிரற்ற...
சடலமாய்போயிற்று!!!!!

நெஞ்சில் - நீ தந்த
காதல் வலி மட்டும்....
என்றும் உயிரோடு!!!!


எழுதியவர் : மரி (12-Nov-11, 8:42 pm)
பார்வை : 408

மேலே