"தொடரும் நினைவுகள்..."

கறைபடா வெள்ளை உள்ளம்,

அழகு முகத்தினால் அடிமையாகி

வாய்மொழியினால் வசியம் செய்யப்பட்டு

வேல் விழிகளில் கருமையிட்டு

விடப்பட்ட காதல் அம்பினால்

காயம்.. கறைகள்.. ரணம்..



வேதனை வெள்ளம் உள்மனதில்

காதல் மயக்கத்தில் நினைவற்று

கனவுகள் நிறைந்தன

கன்னி அவள்மேல்...


நெஞ்சம் நிறைந்த உருவம்,

நினைவில் நீங்கா சீண்டல்கள்,

சிரித்து சிவந்த இதழ்கள்,

ஒற்றைகால் நடனமாடும் நாக்கு,

தாளம் போடும் பற்கள்,

கானம் பாடும் உதடு,

தேன் பாயும் திருமுகம்,

அபிநயம் நிறைந்த அழகுமுகம்,

காதல் சொல்லிடும் கன்னங்கள்,

சுருண்டு திரண்ட கார்குழல்,

சுந்தர பின்னல் ஜடையில்,

சிரித்திடும் செவ்விதழ் ரோஜா,

பிறைநிலவுகள் ஜொலித்திடும் காதணியில்,

வட்டமிட்டு வளைக்கும் பொட்டு,

கோவை இதழ்களின் கொந்தளிப்பு,

வம்பளக்கும் வைர விழிகள்,

ஜாடை பேசிடும் இமைகள்,

அழகு பெட்டகமாம்

அவள் முகத்தில்

அடைந்திருக்கும் என்மூச்சு

ஏதேதோ எண்ணங்கள் என்னுள்ளே,

தொடரும் நினைவுகளாய்...




எழுதியவர் : பிரிட்டோ ஆ (14-Nov-11, 10:17 am)
பார்வை : 401

மேலே