சில்லறை நினைவுகள்



போனாளே! என் நெஞ்சை
புண்ணாக்கிப் போனாளே
போனாளே! அவள் நெஞ்சை
கல்லாக்கிப் போனாளே

விழியாலே கவிபேசி
வழிமறித்த வஞ்சிமகள்
கண்ணாலே ஜாடை சொல்லி
கவிமேடை ஏற்றியவள்
புவிமீது என்னை இன்று
புலம்பவைத்துப் போனாளே

பொன்னுதட்டில் அவ்வப்போது
புன்னகையை அள்ளிவீசி
என் மனதை எடுத்துக்கொண்டு
எங்கோயோ சென்றாளே

களங்கமற்ற என்மனத்தை
கலங்கவைத்தால் காரிகையே
காதல் விலங்கிட்டு இப்போது
காணாமல் போனாளே!

உள்ளத்திலொரு பூ சொருகி
ஓடிச் சென்றவள்
கை நிறைய மலரள்ளி என்
கல்லறைக்கு வருவாளோ!

போனாளே! அவள்நெஞ்சை
கல்லாக்கிப் போனாளே
கல்லாக்கிப் போனவள் என்
கல்லறைக்கு வருவளோ

கல்லறைக்கு வருவாளோ
கண்ணீர்விட்டு அழுவாளோ
இல்லை.....,
சில்லறை நினைவுகளை
எண்ணி எண்ணிச் சிரிப்பாளோ!!!

எழுதியவர் : வெ.பசுபதி ரெங்கன் (14-Nov-11, 3:11 pm)
பார்வை : 414

மேலே