உயிர் எழுத்து

"அ"(ம்)ன்பு என்ற ஆயுததை எடுத்து
"ஆ"சை என்னும் வில்லில் வைத்து
"இ"தயம் என்னும் புள்ளியை பார்த்து
"ஈ"ட்டி போல் என்னை குத்து
"உ"ள்ளத்தில் உயிராய் நுழைந்து
"ஊ"ஞ்சலாய் விளையாடி என்
"எ"ண்ணத்தை எடுத்து அவள்
"ஏ"க்கத்தில் கலந்து என்னை
"ஐ"ஸாய் கரைத்து அவள் கண்ணில்
"ஒ"ளியாய் என்னை மாற்றி அதில்
"ஓ"வியமாய் வரைந்து என்னை
"ஒள"கரத்தில் எடுத்து அதில்
"அக்" ஆயுத எழுத்தை சேர்த்து
என்னில் உயிராய் வாழ்கிறாள்!

எழுதியவர் : இதயவன் (13-Aug-10, 2:43 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : uyir eluthu
பார்வை : 482

மேலே