அவள்...

நினைவே...
என்னை விட்டு நீங்கி
விடு நெஞ்சில் நீயில்லை
அவள் இருக்கிறாள்!

கனவே...
என்னை விட்டு கலைந்து
விடு கண்ணில் நீயில்லை
அவள் இருக்கிறாள்!

உயிரே...
என்னை விட்டு பிரிந்து
விடு உடலில் நீயில்லை
அவள் இருக்கிறாள்!

உறவே...
என்னை விட்டு உரைந்து
விடு உள்ளத்தில் நீயில்லை
அவள் இருக்கிறாள்!

நிழலே...
என்னை விட்டு விலகி
விடு நிஜத்தில் நீயில்லை
அவள் இருக்கிறாள்!

காதலே...
என்னை விட்டு ஓடி
விடு இதயத்தில் நீயில்லை
அவள் இருக்கிறாள்!

எழுதியவர் : இதயவன் (13-Aug-10, 2:53 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : aval
பார்வை : 497

மேலே