மனிதனாய் இரு...!
சுமப்பவருக்கு சுமை அல்ல நீ
சுடுகாடு போகும்போது.....!
சொந்தங்கள் சூழ்த்து வரும்
சுமையாக கன இதயம் ..!
கண்ணீரே உன் மீது
பன்னீராய் தெளிக்கப் படும்..!
கவலையே உன் கழுத்து
மாலையாய் விழுந்திருக்கும்..!
மன்னவனே நீ செல்கின்றாய் ..
மனிதனாக வாழ்ந்து விட்டு...!
அன்பைச் சொல்லி தந்துவிட்டு
அழவைத்தே போகின்றாய் ...
ஆவி போனதடா என் தோழா..
அடுத்த பிறவியில் சந்திப்போம்..!
முன் சென்று நீ நில்லு
பின்னாலே வருகின்றோம்..!
முடிந்த மட்டும் வரும் நாளில்
மனிதராய் நாங்களிருப்போம்..!