எழு தோழா
வணக்கம் : கவிதை
தலைப்பு : எழு தோழா
................................................................................................
பூக்கள் பறிக்காமல் துவண்டு போன காலங்கள் போகட்டும்
பூக்கள் மலர்ந்து , காயம் படாமல் பறித்து கோர்க்கட்டும்
புது மாலையாக ஆகட்டும்
முதல்வர்களும் ,
அரசர்களும் ,
மாதவிகளும் சூடட்டும்..
நம்மை பாராட்டட்டும்
கண்நீர் விட்டு , அழுத காலம் கரை ஏறட்டும்
புது புன்னகையுடன் வசந்த காலம் தொடங்கட்டும்
சொல்ல வந்த வார்த்தையினை வடிக்கட்டி பேச கற்றிடுவோம்
கற்று தந்த கல்வியினை ,
கற்காதவர்களுக்கு புகட்டுவோம்
அப்பாவி ஈழ தமிழர்களை கொன்றவர்களை
எச்சரிப்போம் எழு தோழா
காற்றுக்கு தடை ஏதும் போட்டாலும்
அது உன் முச்சி காற்றாகவே துயில் கொள்ளும்
அது போல நமக்கு என் தடை போட்டாலும்
உடைத்தெறிந்து
நாம் போகும் பாதையை கண்டுஅறிவோம்
காற்றைப்போல
அதிகாலை சூரியன் விழித்து எழுவது போல்
எழு தோழா
சூரியன் எழுந்தால் தான் பகலே விடியும் தோழா
உன் கண் பார்வையும் விரியும் பகலில் தான் தோழா
பூக்கள் மலர்வதும், வண்டுகள் தேன் எடுப்பதும் பகலில் தான் தோழா
நீ பகலாய் இரு தோழா
நிலவு ஒளி தோழா ,
அது நீ உறங்கும் நேரம் தோழா
சூரிய ஒளி தோழா , அது நீ உழைக்கும் நேரம் தோழா
மரம் கனி தரும் தோழா
உன் வாழ்க்கை சுகம் தரும் தோழா
மரம் நிலைத்து நிற்கும் தோழா
உன் வாழ்க்கை அவ்வாறு ஆகாது தோழா
தொடரும் இனிமை
முடிவில் அமையாது
மனிதன் வாழ்வில்
வளரும் போது தான் கஷ்டம்
வளர்த்த பிறகு இல்லை நஷ்டம்
மரம் வாழ்வில்
எறும்பு போல் வேகம் பெறுவோம், மனதில்
நிலவை போல் காட்சி தருவோம் , உலகில்
கதிரவனாய் இருப்போம் பகைவருக்கு
சந்திரனாய் இருப்போம் நல்லவர்க்கு
அமைதியாய் இருப்போம் நன்மைக்கு
வேகமாய் நடப்போம் கடமைக்கு
துணிச்சலாய் இருப்போம் பூமிக்கு
துணிச்சலாய் இருப்போம் பூமிக்கு
துணிவோடு எதையும் வென்றுவிடுவோம் நாட்டிற்கு
எழு தோழா ,
எழு தோழா
நம் தேசத்திற்கு
நன்றி
என்றும் உங்கள் அன்புடன் தோழன்
மணியான்