மழையும் நீயும்...

மழை துளிகள் கிழே விழுந்து ஏற்படுத்தும் இந்த ஒலி, உனது கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து இருக்கும் போது வந்த ஒலி போல் இருக்கிறது...

அந்த துளிகள் மீது வாகனம் செல்லும் போது ஏற்படும் அந்த சிதறல் உன் சிரிப்பை போல் ஜொலியாய் ஜொலிகிறதடி...

எனக்கோ இந்த மழையுடன் சேர்ந்து இருக்க ஆசை, ஆனால் அந்த மழைக்கோ உன்னை போல் என்னுடன் சேர விருப்பம் இல்லை...

கைக்கு எட்டும் தூரத்தில் மழை இருந்தும் என்னால் ரசிக்க மட்டுமே முடிகிறது காரணம் மழையின் நோக்கம் மண்ணை அடைவது என்னை அல்ல...

மழைக்கும் உனக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை, என்னை போன்ற குளத்து நீருடன் சேர மழையை அழைத்தேன் ஆனால் மழையோ, நீ அழுக்காக இருக்கிறாய் என்று சொல்லி நடு வீதியில் விழுந்து வீணாகி போனது உன்னை போல்...

குளத்துடன் சேர்ந்து இருந்தால் குளமாவது வற்றாமல் இருந்து இருக்கும், இபோழுது குளமும் வற்றியதடி மழையால் (உன்னால்)...

எழுதியவர் : காதல் தோல்வி... (17-Nov-11, 11:55 pm)
Tanglish : mazhaiyum neeyum
பார்வை : 311

மேலே