என் தங்கை

என்னைவிட
ஐந்து வயது சிறியவள்
அம்மாவின்
பாசம் முதல்
அத்தனையும் அவள்
பங்கு போட்ட பின்தான் எனக்கு....
தினம் தினம்
சண்டை இருவருக்கும்
ஏனோ பிடிக்காமல்
போய்விட்டது இருவருக்கும்
அம்மா கூட அடிக்கடி சொல்வாங்க
அவள் அண்ணன்
நான் இல்லை
என்று கூட சொல்வாள்
எனக்கே தோன்றும் சில நேரம்
என்னடா இப்படி இருக்காளே என்று
ஓர் நாள்
வீடு சுத்தம் செய்கையில் பார்த்தேன்
அவள் பெட்டிக்குள்
மறைத்து வைத்திருந்தாள்
என் சிறு வயது புகைபடத்தை
புரிந்து கொண்டேன் அவள் பாசத்தை....