வாடிக்கையாய் போன வாழ்க்கை!!

வேலையில்லை,கையில் பணமில்லை,
விலையேற்றம்,போராட்டம்,
உண்ணும் விரதம், உண்ணாவிரதம்
என்று பல காரணங்களால்,
மனித உயிர் மடிந்து,
புதைக்க இடம் தேடும் மனிதர்களும்,
இந்த பூமியில்தான் இருக்கின்றனர்.
அவனுக்கும் உதவாத,அடுத்தவனுக்கும் உதவாத,
கணக்கிலே வராத கருப்புப்பணமூட்டையை மறைக்க,
இடம் தேடும் மனிதர்களும் இந்த பூமியில்தான் இருக்கின்றனர்.
அன்பு இறைவா!?
ஆண்,பெண் என இரண்டு உயிரை படைத்துவிட்டு,
அவற்றின் குணங்களை பல விதமாய் படைத்து விட்டாயே!!...
உன் சொர்க்கலோக தண்டனைகளை மாற்றி அமைத்துக்கொள்.
ஏனென்றால்,மனித உயிரும்,பிறஉயிரும்,
யாராலும் கொல்லப்படுவதில்லை.
பல சூழ்நிலைகளால் தானாகவே இறக்கின்றன.
மனிதனின் மனித நேயம்,ஒரு இடத்தை
மேடு பள்ளம் இல்லாமல் சமமாய்,
நிரவும் மண்ணில் மட்டுமே உள்ளது.
மாந்தற்கிடையில் இல்லை.
இவ்வுலகை படைத்தவனுகே புரியாத,
மதம்,மொழி,இனம்,ஜாதி,பணம், இவற்றைக்கொண்டு
உயிர்களை தாக்காமல் இருந்தால்,
நம் பூமி.......புதுயுகமாய் மாறும்......!
-------------நன்றியுடன்,ஆத்மா(மகேஷ்).

எழுதியவர் : aathma (21-Nov-11, 7:30 pm)
சேர்த்தது : aathma
பார்வை : 352

மேலே