கொஞ்சும் சகியே
அன்பின் உறைவிடமே
ஆனந்த சகியே
முழுமதியின் முகமே
கொஞ்சும் மழலை உன் பேச்சு
புன்னகை தவழும் பூவனம்
சில்லறை ஒலி உன் சிரிப்பு
துள்ளும் மானாய் உன் சிணுங்கள்
வருடும் தென்றலாய் உன் ஆறுதல்
அழகுக் குறிப்புகளை அரியணையில்
அமர்ந்து அன்றாடம் செய்வாய்
பார்த்து சலிப்பது நன் மட்டுமே
என் துயரத்திற்காக உன் கண்ணீரை
பரிசளிப்பவள்
உன்னை விட்டுப் பிரியும் இத்தருணத்தில்
உன் கண்ணீர்த்துளிகள் என்
இதய அறைகளை இருக்குகிறது சகியே..........