உன்னைத்தான் நான் அறிவேன்
ஓரவிழிப் பார்வையிலே உள்ளம் கவர்ந்தவளே
ஓசைப்படாமல் உள்ளே வந்தமர்ந்தவளே
சிவந்த விரல்களால் நெஞ்சப்
புத்தகத்தை திறந்தவளே
உன்னைத்தான் நான் அறிவேன்
வேறு பெண்ணை யார் அறிவார்
கன்னக் குழிவினில் கடிதம் வரைபவளே
கண்களிரண்டில் கார்த்திகை தீபம் ஏந்தி வருபவளே
வானத்து நட்சத்திரத்துடன்
என்னை போட்டியிடச் சொன்னவளே
உன்னைத்தான் நான் அறிவேன்
வேறு பெண்ணை யார் அறிவார்
மாலைப் பொழுதின் மஞ்சளை எடுத்து வந்து
என்நெஞ்சமேல்லாம் தூவியவளே
மனவீதிஎல்லாம் முல்லையாய் படர்ந்தவளே
பாரி நான் மனத் தேர் கொண்டுவரப் பணித்தவளே
உன்னைத்தான் நான் அறிவேன்
வேறு பெண்ணை யார் அறிவார்
இன்னும் ஏன் இந்தக் கோபம் பெண்ணே
அந்திப் பொழுதும் ஆதவனும் விடை சொல்லுதடி
நிலவும் சிறுகச் சிறுக தேயுதடி
மஞ்சள் வானும் நிலவும் தென்றலும் சாட்சி
உன்னைத்தான் நான் அறிவேன்
வேறொருத்தியை நான் அறியேன்
----கவின் சாரலன்