நண்பா என்னையும் பாருப்பா
வணக்கம் : கவிதை
தலைப்பு : மயில் கல்
............................................................................................
கண்ணிருடன் நான் கலங்கியது இல்லை ?
ஆனால் ஈரத்துடன் இருந்து இருக்கிறேன் /
மேகத்தின் மழை துளிபோல் நான் அழுததில்லை?
ஆனால் நலைந்து இருக்கிறேன் /
புல்வெளியில் பனி துளி போல் இருந்தது இல்லை
ஆனால் என் கண்ணீர்ரை தேக்கி வைத்து
இருக்கிறேன்
மானிட தோல் போர்வை எனக்கு இல்லை ?
வெயிலில் காய்ந்து கருத்து இருக்கிறேன் /
பாசத்துடன் அரவணைப்பு செய்தது இல்லை
நான் இளகிய மனது படைத்தவன் இல்லை
எனக்கு இதயம் என்பதே துடிப்பது இல்லை
நான் சுவாச காற்றை சுவாசிப்பது இல்லை
மலை போல் ஆக ஆசை பட்டேன்
முயற்சி இல்லை துங்கிவிட்டேன்
தெரு ஓர கல்லாய் அமர்ந்து விட்டேன்
மயில் கல்லாய் மாறி விட்டேன்....................
நன்றி
என்றும் உங்கள் அன்புக்கு
மணியான்