அனைவரையும் காதலி....!
காதலில் கண் மயங்கும்
கட்டிலில் கவி பாட துடிக்கும்
காண்பவை எலாம் இன்பமாகும்....
கனவுகள் முழுதும் சிரிப்பிருக்கும்...
தவறில்லை தவறில்லை....
அவள் விழியில் கண் மை தெரியும்
அன்பு பெற்றோர் கண் வளையம்..தெரியாது .
பார்கிலே காதலர் கூடுவர்
பெற்றவர் திண்ணையில் வாடுவர்..
பெத்தவரை முட்டாள் என்போம்..
பேரழகே நீதான் என்போம்...
இனக் கவர்ச்சி காதல் அல்ல
இதயக் கவர்ச்சி காதல் ஆகும்
இது இவள் அவன் மீதோ
இல்லை அவன் இவள் மீதோ
இளமையில் வைப்பது இல்லை இல்லை
இன்று போல் என்றும்.......
பெத்தவரையும்...மத்தவரையும்....
உண்மையாய் நேசிப்பதே.....
உண்மையான காதலாகும்.....
அழகு உடல் விரும்புதல்
அழுகும் பிணம் நேசிப்பதாகும்....
அன்பாக வாழ்வதே என்றும்...
அனைவரையும் காதலிப்பதாகும்...!