வண்ண , மீன்களும் , கழுகின் தாமதமும்
வணக்கம் : சிறு கதை
தலைப்பு :வண்ண , வண்ண மின்கள்
அழகிய சமவெளியில் ,
அழகான குட்டைக்குள்
துள்ளி துள்ளி திரியும் ,
முத்தான மின்கள்
சத்தம் இல்லாமல் விழும் குட்டி கற்கள்,
அவ்வளவு அமைதியான இடம்
மிகவும் மகிழ்ச்சியான இடம், சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்தன அந்த மின்கள்,
எவன் கண் பார்வை பட்டதோ
தெரியவில்லை ,
குட்டையில் உள்ள தண்ணீர் பாதியாக
குறைந்து போனது
ஒரு கழுகின் கண் பார்வைக்கு எட்டியது
அந்த குட்டை ,
தண்ணிர் பற்றாகுறையால் ஏற்பட்டு யிருக்குமோ
இந்த நிலைமை
வருடம் , வருடம் , வரும் மழை
இந்த , வருடம் வர வில்லை
தண்ணீரும் குறைவாகி கொண்டே போகிறது
கழுகு நோட்டம் பார்த்து இறங்கியது ,
இன்று நல்ல வேட்டை தான் என்று ,,
ஆஹா ஆஹா என்ன அழகான வண்ண வண்ண மீன்கள் ,
இவற்றில் சுவை , திடம் , மனம் எல்லாம் இருக்குமே
முதலில் எதை தீண்ணலாம் நறைய மீன்கள் இருக்குதே வித வித மாக உள்ளதே ,
எது இதில் ரொம்ம்ப ரொம்ப சுவையாக இருக்கும்
என்றே யோசித்து கொண்டே இருந்ததாம்
நேரம் போக போக குட்டையும் குன்றி கொண்டே போனது
மீன்களும் வெளிப்படையாய் தெரிந்தன
கழுகுக்கு நா சுவை தாங்க முடியவில்லை
எதை பிடிப்பது , எதை தீன்பது என்றே
யோசித்து கொண்டு இருந்ததது
மீன்கள் கடவுளிடம் வேண்டியது
எங்களை காப்பற்றுங்கள் இறைவா
எங்களை காப்பற்றுங்கள் இறைவா என்று,
கழுகு இதோ , உங்களை சாப்டுக்கிறேன்
இதோ , உங்களை சாப்டுக்கிறேன்
என்று எதை பிடிப்பது , எதில் அதிக சுவை இருக்கும் என்றே யோசித்து கொண்டு இருந்ததது,
மீன்கள் , கடவுளே உங்களுக்கு இரக்கம் இல்லையா
கொஞ்சம் எங்களை பாருங்கள் ,
கழுகும் எங்களை உண்ணாமல் வைத்து இருக்கிறது
நீங்களும் எங்களை காப்பாற்றாமல் இருக்கிறிர்கள்
என்றது
நாங்கள் கழுகுக்கு இறைச்சியாகி இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இறந்து இருப்போம்
ஆனால் தண்ணீர்யின்றி நாங்கள் துடித் துடித்து சாகுவது தான் எங்கள் நிலைமையா ,இது நாயமா என்றது
கழுகு அப்போது தான் , ருசியாக ஒன்றை பிடிக்க
வாய்வைத்த போது ,
திடீர் என்று
ஜோ, ஜோ என்று ஒரே வேகமான
மிகவும் வேகமான மழை பொழிந்தது ,
அந்த வண்ண மீன்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது
கழுகு அந்த வேகமான மழையில் மாட்டி கொண்டு உயிர் பிரிந்து ,
மினுக்கு உணவாய் போனது ,,,,,
மீன்கள் உண்ணவும் உணவு கொடுத்தாய்
நாங்கள் வசிக்கவும் இடம் கொடுத்தாய்
என்று மகிழ்ச்சியுடன் கடவுளுக்கு நன்றி சொன்னது .......
(கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை)
நேரம் கடத்தினால் எதுவும் ஆபத்தில் தான் முடியும்,
கழுகுக்காக படைக்க பட்ட மீன்களை அது கொன்று தின்று இருந்தால் , ஒன்றும் நடந்து இருக்காது
கழுகு பறந்து இருக்கும் ,
ஆனால் அது நேரம் கடத்தியதால் தான் இந்த நிலைமை என்று கடவுள் சொன்னார் ...................
நன்றி
என்றும் உங்கள் அன்பில் உயரும்
மணியான்