பொழுது விடியுமா.......?

அன்று ஒரு அழகிய மாலைப் பொழுது, ஸ்வேதா தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து சிந்திக்கிறாள் தன் உறவுகளுடன் கூடி ஆடிய காலங்களின் இனிமை நினைவுகளை..........
இன்பமான ஒற்றுமை நிறைந்த அழகிய சிறு குடும்பத்தின் கடைசிக் குத்துவிளக்குதான் ஸ்வேதா,
பாசமிகு அண்ணாவும் அவளில் கொள்ளைப் பிரியம் கொண்ட அக்காவும் அதட்டலுடன் அன்பும் அதிகமாய் அப்பா அன்பும் அமைதியும் பொறுமையே உருவான அம்மா...
செல்லமாய் குறும்புசெய்து வீடினையே இரண்டுபடுத்தி நகைக்கையில் ரசித்திடும் உறவுகளுடன் இன்பாக நகர்ந்தது அவளது வாழ்க்கை......
மார்கழிக் குளிரில் பாலனின் பிறப்பினை இனிமையாக கொண்டாடி இன்சுவை உணவுடன் நாள் கழித்து விடிந்தது கொடூரமாய் அமையுமென எண்ணாத அன்று விடியல்......
அழகிய ஆடைகளை அம்மா அலம்பிவிட , வந்திருந்த உறவுகளின் பசியாற்றவென அவள் சென்றால் உணவு வாங்கிவிட.......
வீதியெங்கும் சனநெரிசல்
ஒப்பாரி ஓலங்கள்.....
திகைத்து நின்றால் ஒருகணம்...
அஹ்...!
என்ன இது வரும்போது இப்படி இருக்கலையே........??
என்னவென வியப்புடனே
கேட்டாள் ஒருவரிடம்
அங்கிள் என்னாச்சு.....?
பதில் கிடைக்கவில்லை
ஒப்பாரிதான் பதிலாக
நெருக்கடியின் மத்தியில் வீடுநோக்கி நடை பயின்றாள் பாலகி......
மகள் நீ போகாதே.....
உன் வீட்டின் பக்கம் போகாதே.....; நீ மட்டுமாவது வாழ விட்டுவைத்தானே அந்த இறைவன் என்று ஒரு குரல் ஒலித்தது அவளை நோக்கி....
என்னாச்சு......?
எங்கே என் குடும்பம்......?
இப்போதானே நான் இங்கு வந்தேன்....?திகைத்தாள்
அழுது புலம்பினால்.......
பதில் வந்தது......
நம் கடல் பொங்கியெழுந்து நம் உஊரையே அழித்துவிட்டதம்மா,
உன் குடும்பத்தார் எங்காவது போனார்களோ இல்லை என்ன ஆனார்களோ புரியவில்லை நீ வா என்னுடன்.......
பொய் ஒரு அடைக்கலம் எடுத்துக்குவோம் எண்டு அவர் அழைத்துச்சென்றார் கூடவே......
நாட்கள் கழிந்தன, பல உதவிகள் என்றும்,அதுவென்றும் இதுவென்றும் நாட்கள் கழிந்து மீள்குடியேற்றம் செய்தனர்....
இவளது உறவுகள் எவரும் கிடைக்கவில்லை உயிருடன்......
தனிமையின் பிடியில் வாழப் பழகிக்கொண்டாள்....
இன்பமிகு வாழ்வினை சுவைத்தவள் வாடும் செடியாக மாறத்தொடன்கினாள்.
அன்பாக தொடங்கிய அவரது பரிவு பின் அராஜமாக மாறத் தொடங்கின,
அடைக்கலம் கொடுத்தவர் அடிமையாக்க தொடங்கினார்....
வாழ்க்கை சுத்த சூனியமாய் ஆனது அவளிற்கு....
இன்று தனது கொடூரத்தின் நினைவாக ஏழு வருடங்களை எட்டுகின்ற நிலையில் தினம் தினம் பொழுது விடிகின்றது......
அனால் அவளது இழந்த வாழ்விற்கான பொழுது இன்றுவரை விடியவில்லை..........
ஏங்கியவண்ணம் தன் கன்னங்களை நனைத்த கண்ணீர்ப்பூக்களை தன் காய்ச்சிப்போன கரங்களினால்
வருடிக்கொண்டு எண்ணினால் மனதிற்குள்......
மாலையும் வருகின்றது தினம் தினம்
பொழுதும் விடிகின்றது அழகாய்த்தான்....
எனக்கான பொழுதுமட்டும் இன்றும் அமாவாசை இரவாக இருக்கின்றதே....
என்று விடியும் எனக்கான என் இனிமை நிறைந்த காலைப்பொழுது என்று எண்ணிக்கொண்டு எழுந்தாள்......
ஸ்வேதா..........
அடியே ஸ்வேதா........
எங்கடி போய்டே.....
உன்னை வீடில் கொண்டுவந்த நாளாய் நாங்கள் உனக்காக காசை கொட்டுரதுதான் மிச்சம் ஆனது ஒண்டுமில்லை.....
அனைத்தையும் செய்து முடித்த ச்வேதாவிட்கு
வீட்டுக்கார அம்மாவின் பாராட்டுமடல்......
சிரித்தவளாய் வர்றேன் மா......
ஓடுகிறாள் விடியலின் நினைவை நோக்கி எண்ணியவளாய்.........
குறிப்பு:- சுனாமியின் ஏழாம் அண்டு நிறைவை எதிர்நோக்கி வலிகளுடன் நாட்களைக் கடத்தும் உறவுகளை இழந்த உறவுகளிற்கு இது சமர்ப்பணம்....