தேடுகிறேன் தாய் மடியை தோழியே உன் வடிவில்
தேடுகிறேன் ஒரு தாய் மடியை
தோழியே உன் வடிவில்
தேடி வந்து மடி கொடுத்தால்
நிம்மதியாய் தூங்கிடுவேன்
மனதில் ரணம் இருந்துவிட்டால்
தூக்கமும் எட்டாகனிதான்
தோழி நீ இருந்து விட்டால்
சொர்கமும் எனக்கு மிதியடிதான்
உன்னோடு தோள் சாய்ந்து
என் சுமைகளை சொல்லிவைத்து
மனபாரம் இறக்கி வைத்து
நான் லேசாக காரணம்
தாய் வாசம் உன்மேல் வீசும்
என் நட்பில் ஒரு தேவதை நீ
தானாய் கிடைத்த வரமும் நீ
சிரிக்கின்ற பூவும் நீ
நடக்கின்ற நிலவும் நீ
பேசுகையில் நகம் கடித்தால்
செல்ல கோபம் கொண்டு கண்டிப்பாய்
உன் மடியில் நான் தூங்க என்னிடம் சொல்லாமல்
கண்விழிப்பாய்
உறக்கம் கலையாமல் தான் இருக்க
சிலமணித்துளி சிலையாவாய்
தவம் இன்றி கிடைத்த வரம் நீ
உலகம் வாழும் வரை உன் நட்பு வேண்டாம்
நான் உயிரோடு வாழும் வரை தொடர்ந்திருந்தால்
போதும்