மாவீரர் நினைவு நாள்

இன்னும் சில நாள்
இப்படியே உறங்கிடுங்கள்

கவலை கொள்ள வேண்டாம்
கல்லறை துயில் தொடங்குங்கள்

ஓர் நாள்
தமிழிழம் பிறக்கும்
தனி ஈழம் அமைக்க
உங்கள் துயில் கலைத்திடுவோம்
அப்போது வந்திருங்கள்....

அதுவரை உறங்கிடுங்கள்

உங்கள் மரணத்தில்
நாங்கள் பிறப்பு கண்டோம்

உங்கள் வீரத்தில்
வளர்ந்து வந்தோம்

உங்கள் வழியில்
வென்றெடுப்போம் தமிழ் ஈழம்

மாவீரர்களுக்கு
மரத் தமிழனின்
வீர வணக்கங்கள்.....

எழுதியவர் : பாலமுதன் ஆ (27-Nov-11, 9:37 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 740

மேலே