மாவீரர் மரணம் வேண்டும் எனக்கு
தவறு செய்துவிட்டேன்
தமிழ் நாட்டில் பிறந்துவிட்டேன்
வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்
வந்துவிடுகிறேன் தமிழிழம் காக்க
சாதாரண மரணம்
வேண்டாம் எனக்கு
சரித்திரம் மார்பு தட்டி சொல்லும்
மாவீரர் மரணம் வேண்டும் எனக்கு
கோழை உயிர் வேண்டாம்
தலை கொய்த போதும்
தமிழிழம் காத்த பெயர் வேண்டும்
வீர மரணம் வேண்டும்
மாவீரர் நினைவிடத்தில்
என்னக்கோர் இடம் வேண்டும்
கண்ணீர் சிந்தி
வாழ விரும்பவில்லை
ஈழ தமிழன் கண்ணீர் துடைத்து
வாழ விரும்புகிறேன்
கடிதம் எழுதி
கதை சொல்ல
அரசியல் வாதி இல்லை நான்
வீரம் விதைத்து
விளைந்து வந்த தமிழன் நான்
பயமில்லை
மரணம் ஒரு முடிவில்லை
ஒரு வீரன் மரணத்தில்தான்
பல மாவீரர்கள் எழுவார்கள்
அவ்வழியே என் உயிர் போனால்
இப்பொழுதே ஏந்தி நிற்பேன்
தமிழிழ ஆயுதத்தை
தமிழன் உயிர் போகும் நேரம்
மௌனம் காத்து
கை கட்டி வேடிக்கை பார்த்த
தமிழ் நாட்டு தமிழன் என்று
வரலாறு எழுதுவதற்கும் முன்
எழுதிவிடுங்கள்
மாவீரர் நினைவிடத்தில் என் பெயரை....
நினைவிடங்களை அழித்ததாலும்
நினைவேந்தல் மரபு மாறாது
ஆயுதம் கொண்டு தடுத்தாலும்
என் தமிழிழ வேள்வி அடங்காது
தவறு செய்துவிட்டேன்
தமிழ் நாட்டில் பிறந்துவிட்டேன்
வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்
வந்துவிடுகிறேன் தமிழிழம் காக்க....