பேருந்து கட்டணம்
நகர பேருந்துக்கும்
நகராத பேருந்துக்கும்
வந்துருச்சு கட்டண உயர்வு....
தொலை தூரம் போய் வர
தொடர் பேருந்து
இனி எவன் செத்தாலும்
அலைபேசி அழைப்போடு
பயணம் ரத்து....
பல வண்ணத்துல பேருந்து
அவரத்துக்கு ஏறினா
பிரசவம் ஆகுற செலவு.....
ஆட்சி மாற்றம்
கொண்டு வந்தோம்
நீங்க
அலட்சியமா மாற்றங்களை
கொண்டுவாறிங்களே....
தப்ப ஒருத்தர் மேல ஒருத்தர்
சொல்லிக்கிட்டு
தண்டனைய
மக்களுக்கு கொடுத்துடீங்களே....
மத்தியில தரலண்டு
இப்படி
மக்கள்கிட்ட புடுங்குரீங்களே....
கூலிக்கு வேலை செஞ்சு
வயிறு காயிது
ஏழையின் நிலைமை
இன்னும் தேயுது....
இவங்க முன்னேற
திட்டம் போடுவிங்கான
பஸ் கூட ஏர முடியாத
அளவுக்கு திட்டம் போடுறிங்க....
பணம் உள்ளவனுக்கு
சொகுசு பேருந்து
இல்லாதவனுக்கு
பாழடைந்த பழைய பேருந்து....
நீங்களே வித்தியாச
படுத்தி பாக்குறிங்க....
ஆனது ஆகி போச்சு
இனியாச்சும்
பயண சீட்ட
கிழிக்காம கொடுங்க....