கணவன் & மனைவி ஜோக்ஸ்
கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே..
மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே
கணவன்:- துவைக்கிறவனுக் குதானே கஷ்டம் தெரியும்...!!
கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே..!
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..
மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!
மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்...
கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?