உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது ...

அந்த சிலுவையில்
அறைய இன்னும்
நிறைய மிச்சமிருக்கிறது ...


அப்பாவை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பி விட்டு

சிலுவையின் முன்
மண்டியிட்டிருக்கிறான்
தன் மகனுக்காக ..!

“உன் பாவங்கள்
மன்னிக்கப்பட்டது ...”
ஒப்புவித்து
நகர்ந்தார் பாதிரியார் ..!

-எபி

எழுதியவர் : எபி (30-Nov-11, 8:35 pm)
சேர்த்தது : rosebi
பார்வை : 283

மேலே