வளரும் ஹயாக்ஸ்-க்கும் வளர்க்கும் எழுத்து.காமிற்கும் வாழ்த்துகள் !

இணைய சேவையில்
இணையில்லா வளர்ச்சியில்
எட்டு வருடங்களும்
உன் இமைகொட்டா உழைப்பினால்
எட்ட முடியா உயர்ச்சியானதால்
எங்களது வாழ்த்துகளை
எழுத்தாக்கி வாழ்த்துகிறோம்!

முகப்பு பக்கத்தில்
முதலிடம் பிடிக்கும்
இணைய தேடலாய்
எங்கள் கணினியில்
உன் சேவை
எப்பொழுதும் இருக்கிறதே
எப்படியெல்லாம் உன்னை வாழ்த்துவது ?

எடுத்த எடுப்பிலேயே
தேடிபெற வேண்டிய தேவையாகி
தெரிந்து வைத்திருகிறதே
எங்களது கைபேசியின் புக்மார்க்குகள்
உன் விலாசத்தினை !

நாள் பல கவிதையில்
நட்சத்திரங்களை விஞ்சும்
எண்ணிக்கையில் நீயோ .......
எதிர்காலமாய் அல்லவா இருக்க போகிறாய் !

உனது
காப்பி தூள் பக்கத்தில்
கண்விழிக்கும் எம் பொழுதுகள்
காரிருள் கனவிலும்
கவிதையாகி உம்மோடு
உறவு கொண்டேயிருப்பது
காலத்தின் தொடர்ச்சியோ !

பாரதி, பாவேந்தர், தாகூர்
ஷெல்லி , கீட்ஸ் மற்றும் பாப்லோவென
இளைய கவிஞர்களை
எழுத்து.காம் நீயோ
நாளைய சரித்திரத்திற்காக
நம்பிக்கையூட்டி தயார்செய்கிராயே !

கவி படிக்க வந்து
கவிஞர்களானவர்களை
கருத்தினால் கண்டபோது
எம் கரம் உமக்காகவே
சிரம் தாழ்ந்து மெச்சுகிறது!


தமிழின் புகழ் தரணி சிறக்க
தருகின்ற உன் சேவையில்
எண்ணற்ற சுவை பக்கங்களாய்
இணையத்தில்
நீ நிரப்ப
எங்கணம்
நாங்கள் வாழ்த்துவது!

இதோ ...............

ஹயாக்ஸ் -ன் இணைய சேவை !
கணிணியுலகின் இன்றியமையா தேவை !

எழுத்து.காம் உன்னுடைய சேவை
எப்பொழுதும் கவிதைகளின் தேவையாய்!



இப்படியாகத்தானே இருக்கிறது !



வாழ்க!
உம் சேவை வளரட்டும் உம் புகழ் !
வாழ்த்துகள்! வாழ்த்துகள் !

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (30-Nov-11, 8:46 pm)
பார்வை : 385

மேலே