ரோஜா கூட்டம்...

கல்லூரி காலங்கள்
கனவிற்குள் தினம் நினைவாக...

வகுப்பறையில் பாடத்தை விட படத்தை பற்றிய
பேச்சுக்கள் நிறைந்த நாட்கள்...

தேர்வெழுத நெருங்கும் சமயங்களில்
ஒன்றாக அமர்ந்து படித்த நிமிடங்கள்...

சோர்ந்துபோகும் சமயங்களில்
தோள்கொடுத்த ரோஜாக்கள்...

சில கோபங்களும் செல்ல சண்டைகளும்
தொலைந்து போன கடைசி நிமிடங்கள்...

இன்று வெறும் ஆடோகிராப் நோட்டில்
அடங்கிவிட்ட ரோஜா கூட்டங்கள்...

எழுதியவர் : anusha (1-Dec-11, 2:28 pm)
Tanglish : roja koottam
பார்வை : 618

மேலே