அந்த சில நிமிடம்
நா செத்த சேதி எப்படி சொல்ல
இல்ல தெரியாம போயிடுமோ
என் தலையும் நசிங்கிடுச்சி
yeppadi nee adayalam kandu kolla
ரத்தவெள்ளமாகிடுச்சே
நீ குடுத்த பாலு எல்லாம்
பாலு கடன் தீக்களையே
பாவி நானும் முன்ன போறேன்
சொல்லாம போறனேன்னு
நின்னு போன இதயம் கூட துடிக்குதுதம்மா
ஓத புள்ள பெத்தவளே
உன் பொழப்பு என்னவாகும்
செத்த பின்னு கலங்குதம்மா
என் கண்ணு முழி உன்ன தேடி
பத்தடி தூரம் தள்ளி போயிருந்த
பட்டு போல உன்ன பார்த்துருபேன்
பாவி நானும் பாக்காம போனதால
பட்டுனுதா விழுந்துபுட்டேன்
எழுந்துகூட நிக்கலையே ஏத்திபுட்ட
எதிர் வண்டிக்காரன்
போதையும்தா போட்டுருந்தேன்
பாவி நீ சொன்ன பேச்சை கேட்கலையே
கண்ணுமுன்னு தெரியாம
எத்தன முறை ஓட்டிருபேன்
இந்த முறை உயிர் போகும்னு
எந்த நாளும் தெரியலையே
கோட்டிக்காரன் சொன்ன சொல்லு
ரத்தவெள்ளம் நீந்துதம்மா
அம்மான்னு கத்தலையே அப்படியே ஏத்திபுட்டான்
தல வெட்டின ஆடு போல
நடுரோட்டுல நா துடிக்க
ஊருசனம் உச்சிகொட்டி பாக்குதம்மா
என்னனு நா சொல்ல எப்போ உயிர் போனதுன்னு
யாருக்குமே தெரியவில்ல
செத்து போனது யாருன்னு
செய்தி வர நேரமாகும்
சேதி தெரியாத பாவி சிறுக்கி
சோத்த போட்டு கத்துருப்ப
நா என்ன செய
காலைல போன புள்ள
ராத்திரி காணலையே உன் நெஞ்சி துடிக்குமே
நா என்ன செய்ய
தலை விதி தெரியாம சாலை விதிய மதிக்காம
போரனம்மா போரனம்மா
-Jagakutty