காதல் பாடம்

தூண்டில் போட்டு
காத்திருந்து
நான் பிடித்த
முதல் காதல் மீன்

நல்ல மீன் என்று
நாவில் படாமல் விழுங்கிவிட்டேன்

கெண்டை மீனல்லவா
தொண்டையில் சிக்கிக்கொள்ள

விழுங்கவும் முடியவில்லை
துப்பவும் முடியவில்லை

மீன் முள் போல்தான் காதல்
விழுங்கிய பின்தான் தெரிந்து

என்ன பயன்.?..

தினம் தண்ணீர் குடித்து
கண்ணீர் வடிக்கிறேன்

வலியும் குறையவில்லை
வெளியே வர வழியேதும் தெரியவில்லை

முதலில் தின்றதே என்னை
முழுவதும் தின்ன
இனியொரு முறை தொடுவேனா அந்த மீனை.?..

காதல் பல பேர்க்கும் இப்படிதான்
பாடம் கற்ப்பிக்கிறது....

எழுதியவர் : பாலமுதன் ஆ (3-Dec-11, 6:24 pm)
Tanglish : kaadhal paadam
பார்வை : 470

மேலே