நீ இல்லை
தேனே ஊரும் அமிர்தங்கள்
இனி நஞ்சுகள் ஆகும் ....
கவிதை புழங்கும் என் மொழி
இனி மௌனம் ஆகும் ..
கனவில்லா உறக்கம்
இனி உன்னாலே நேரும்
என் நிகழ்காலம் யாவும்
இனி சாபங்கள் ஆகும்
இருளில் வானம் எங்கும்
உன் முகம் தோன்றி மின்னும்
திகைத்தேன்........திகைத்தேன்........
மீளவில்லை
இதுவரை விடியலே...
பிறந்ததில்லை