மீண்டும் அழைப்பாயா

இன்னுமா தூங்குற அடப்பாவி..!
சாப்டியா இல்லையா.?
என்ன பண்ற பிஸியா..?.
நாளைக்கு கோவிலுக்கு போகலாமா
எங்க ஆபிஸ்ல இன்னைக்கு........
இராவணா சாங் கேட்டியா..
எங்க இருக்க..
எத்தனை பீர்..?????
நானா,சப்பாத்தி சாப்பிடறேன்.."
இன்னுமா வீட்டுக்கு போகல...

இன்று...
இதோ, உன் அழைப்புகளின்றி
உயிரற்ற சடலமாய்
என் அலைபேசி....
கல்லறை மீது எழுதப்பட்ட
வாசகங்களாய்
நீ எப்போதோ அனுப்பிய
குறுஞ்செய்திகளை மௌனமாய்
பார்த்து கொண்டிருக்கிறேன்..

எழுதியவர் : JAISEE (21-Aug-10, 8:42 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 1041

மேலே