இயற்கை
தண்ணீர் மாசுபடுவதால் நமது சந்ததிகளும்
கண்ணீர் சிந்தப் போகின்றதே.
மரங்கள் அழிவதாலே என்றும் வளமளிக்கும்
மழையும் பொழிவதில்லை இங்கே.
தூய்மைதனை இப்புவியில் காத்து நமது
மெய்யை நோயின்றிக் காக்கலாம்.
மணம் பரப்பிடும் வனத்தைக் காக்கும்
குணம் அனைவருக்கும் தேவையே.
நிலம் நித்தம் மாசுபடுதலால் ஞாலத்தின்
பலம் சத்தமின்றிக் குறையுதே.